ஐயோ… காரோட முன்பகுதியில இருந்து தீ வருது… நெடுஞ்சாலையில் நடுரோட்டில் எரிந்து சாம்பலான இ-கார்… நெஞ்சை பதறவைக்கும் விபத்து…!

By Swetha on கார்த்திகை 5, 2026

Spread the love

ஷாப்பூர் – மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில், நாசிக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சாரக் கார் ஒன்று கதிவாலி அருகே திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தின்போது காரின் முன்பகுதி மற்றும் இன்ஜின் பகுதியிலிருந்து பெரிய தீச்சுவாலைகள் வேகமாக வெளியேறியதுடன், சில நிமிடங்களில் தீ முழு வாகனத்தையும் சூழ்ந்து கொண்டது.

இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், இந்த திடீர் தீ விபத்தில் மின்சார கார் பெருமளவில் சேதமடைந்து முற்றிலுமாக கருகியது குறிப்பிடத்தக்கது.

   

https://twitter.com/nextminutenews7/status/2117985106073997328/video/1

   

இந்த எதிர்பாராத விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின்சார வாகனங்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தீ விபானத்திற்கான துல்லியமான காரணம் குறித்து காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.