பகீர்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தண்டவாளத்தில் பலியான கொடூரம்… பின்னணி என்ன?… நெஞ்சை நடுங்க வைக்கும் கோர சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ரயிலில் அடிபட்டுத் தாயும் அவரது இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாதிகி மண்டலத்தில் அமைந்துள்ள வேமூலபாடு ரயில்வே கேட் அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுமார் 35 வயதுடைய தாயும், அவரது 8 வயது குழந்தையும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 10 வயதுடைய மற்றொரு குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டது.

   

https://twitter.com/pulsenewsbreak/status/2117918240643195038/video/1

   

படுகாயமடைந்த அக்குழந்தை ராயல் செருவு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் இந்த கோர விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.