BREAKING: மீண்டும் கனமழை… சற்றுமுன் தமிழகத்திற்கு வந்த ஹை அலெர்ட்…. உங்க ஊர் இதுல இருக்கா…?

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த பகுதிகள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மக்கள் இடி மின்னலின் போது பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உங்கள் பகுதியில் தற்போது மழை பெய்கிறதா அல்லது வானிலை மேகமூட்டத்துடன் காணப்படுகிறதா?