தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் குறைந்த விலையில் தரமான காய்கறிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகுப்பு நாளை முதல் வரும் 7ஆம் தேதி வரை கூட்டுறவு மொத்த பண்டக சாலைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கடைகளில் விற்பனை செய்யப்படவுள்ளது. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், எலுமிச்சை, தேங்காய் மற்றும் இஞ்சி ஆகிய அத்தியாவசியமான 10 வகையான காய்கறிகள் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பொதுமக்களின் பண்டிகைக் காலச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இவ்வளவு காய்கறிகள் அடங்கிய முழுத் தொகுப்பின் விலையும் வெறும் ரூ.100 மட்டுமே என அரசு நிர்ணயித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சந்தையில் காய்கறி விலை உயரக்கூடும் என்ற கவலையைப் போக்கும் இந்த பயனுள்ள நடவடிக்கையை பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பயன்படுத்தி பயன்பெறலாம்
