90 வயசுல சிக்ஸ் பேக்கா?… ஆஸ்பத்திரி போனதில்லையாம்!… சர்வதேச மேடையையே மிரள வைத்த தாத்தா… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

ஜப்பானைச் சேர்ந்த 90 வயதான தோஷிசுகே கனசாவா, வயது என்பது வெறும் எண்தான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சர்வதேச ஆணழகன் மேடையில் களம் கண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ஸ்பெயினில் நடைபெற்ற 50 வயதுக்கு மேற்பட்டோருக்கான சர்வதேச போட்டியில் பங்கேற்ற இவர், இளைஞர்களுக்கு இணையான உடற்கட்டுடனும் அபார தசை வலிமையுடனும் போஸ் கொடுத்து பார்வையாளர்களைக் கவர்ந்தார்.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வரமுடியவில்லை என்றாலும், இந்த முதுமைப் பருவத்திலும் சர்வதேச மேடையில் இளைய தலைமுறையினருடன் களமிறங்கியதே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய சாதனை என இவர் கருதுகிறார். இலக்குகளை அடைவதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்துவதே இவரது முக்கிய நோக்கமாகும்.

   

தமது அசாத்திய ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய ஜப்பானிய உணவுகள், தினசரி உடற்பயிற்சி மற்றும் சுயக்கட்டுப்பாடு நிறைந்த வாழ்க்கை முறையே அடித்தளம் என கனசாவா பகிர்ந்துள்ளார். வெற்றி பெறுவதைத் தாண்டி, 90 வயதிலும் தளராத மன உறுதியுடன் சவால்களை எதிர்கொள்ளும் இவரது தன்னம்பிக்கை தற்போது இணையத்தில் பலருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளது.