“குழந்தைங்க சாப்பிட்டது கஷ்டமா இருக்கு…” வெஜ் பிரியாணியில் சிக்கன் துண்டுகள்… விமான நிலைய உணவகத்தில் குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வைரல் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில், சைவப் பிரியாணியில் கோழிக்கறித் துண்டுகள் கலந்திருந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியையும் கடுமையான விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு விமான நிலையத்தின் 1-வது முனையத்தில் உள்ள ‘டேஸ்ட் ஆஃப் இந்தியா’ உணவகத்தில் பியூக் அகர்வால் என்ற பயணியும் அவரது குடும்பத்தினரும் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்துள்ளனர். பில்லில் சைவ உணவு என்றே தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், உணவைச் சாப்பிட்டபோது அதில் சில கோழிக்கறித் துண்டுகள் இருப்பதைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் கடுமையான சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் என்பதால், குழந்தைகளும் அறியாமல் சாப்பிட்ட இந்தச் சம்பவம் தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.

   

உணவக மேலாளரிடம் இது குறித்துக் கேட்டபோது, பிரியாணியில் கோழிக்கறித் துகள்கள் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்குத் கோரிக்கை விடுத்துள்ள பயணி, உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சைவ மற்றும் அசைவ உணவுகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்படுவதால் இதுபோன்ற தவறுகள் நடப்பதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வரும் நிலையில், இச்சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.