ஐயோ கொடுமையே… பூட்டிய வீட்டில் பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை… மர்ம நபர்களின் துணிச்சலான செயல்… ஹைதராபாத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

By Swetha on கார்த்திகை 1, 2026

Spread the love

ஹைதராபாத் அல்வால் காவல் எல்லைக்குட்பட்ட ஜானகி நகர் காலனியில் வசித்து வரும் குடும்பத்தினர் சிலர், தம்மைகுடாவில் நடைபெற்ற சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றிருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்கப் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 29 தோலா தங்க நகைகள், 28 தோலா வெள்ளிப் பொருட்கள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. சுப நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றிருந்த நேரத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் இந்தத் துணிச்சலான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   

https://twitter.com/TNewsTelugu/status/2116810493935624702/video/1

   

இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில் அல்வால் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தலைமறைவாக உள்ள சந்தேக நபரைத் தேடி வலைவீசி வருகின்றனர்.