தமிழகமே அதிர்ச்சி…. டெங்கு காய்ச்சலுக்கு 6 வயது சிறுமி பலி…. திருப்பூரில் சோகம்…..!

By Nanthini on கார்த்திகை 1, 2026

Spread the love

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் தீவிரமடைந்துள்ள டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வதம்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் – பார்வதி தம்பதியின் மகளான ஜெயஸ்ரீ, அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார். கடுமையான காய்ச்சல் காரணமாக பழனி அரசு மருத்துவமனை மற்றும் தாராபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற பின், உடல்நிலை மோசமடைந்ததால் தாராபுரம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த போதிலும், ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்ததால் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, தாராபுரம் அரசு மருத்துவமனையில் மேலும் சிலர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழையினால் தேங்கும் நீரால் பரவும் கொசுக்களின் தொல்லையும், இதனால் ஏற்படும் டெங்கு போன்ற கொடிய காய்ச்சல் பாதிப்புகளும் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. எனவே, சுகாதாரத் துறை உடனடியாக இப்பகுதிகளில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்களை அமைத்து, கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனவும், காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளும் சிகிச்சைகளும் விரைவாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.