திக் திக் திக்… வாலிபரைக் கொன்று ஏரியில் புதைத்த நண்பர்கள்… செல்போன் சிக்னலால் வெளிவந்த கொடூரம்… 3 நாள் தேடலுக்குப் பின் போலீஸ் நடவடிக்கை…!

By Swetha on ஐப்பசி 30, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளைஞர் பிரசாந்த். டைல்ஸ் வேலை செய்து வந்த இவரது தாய் எழில்செல்வி, சென்னையில் நடிகர் சரத்குமார் – ராதிகா வீட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி சென்னையில் உள்ள தனது தாயைப் பார்ப்பதற்காகச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற பிரசாந்த், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது மாமா ரமேஷ் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தின் செல்போன் சிக்னல் மற்றும் டவர் லொகேஷன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த பிரசாந்தின் நண்பர்களான தேவராசு (18) மற்றும் தினேஷ் (23) ஆகிய இருவர் மீது சந்தேகம் எழுந்தது. அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், பிரசாந்துக்கும் அவர்களுக்கும் இடையே இருந்த முன்விரோதம் காரணமாக, பொன்னேரி கடற்கரை பகுதிக்கு அவரை வரவழைத்து அடித்துக் கொலை செய்து அங்கேயே குழிதோண்டி உடலை புதைத்த திடுக்கிடும் தகவல் வெளியானது.

   

இதையடுத்து, நண்பர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், கொலைக்கான உண்மையான காரணம் குறித்தும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொல்லப்பட்ட பிரசாந்தின் உடலை மீட்கும் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். வாலிபர் மாயமான வழக்கில் அவரது நண்பர்களே கொடூரமாகக் கொலை செய்து புதைத்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.