நான் அவள கொன்னுட்டேன் சார்… குடும்பத் தகராறில் மனைவியைக் கொன்று… போலீஸில் சரணடைந்த கணவன்… ம .பி – யில் அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 30, 2026

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கர்வா சௌத் பண்டிகையன்று, பெண் ஒருவர் அவரது கணவரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைச் சம்பவத்தைச் செய்த கணவர், தானாகவே காவல் நிலையத்திற்குச் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்தார். அவரை உடனடியாகக் காவலில் எடுத்த காவல்துறையினர், இந்த கொலையின் பின்னணியில் உள்ள காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், இத்தம்பதியினரிடையே குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்துள்ளது என்று அவர்களின் குழந்தை காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளது.

   

இந்தத் தொடர் சண்டையின் உச்சக்கட்டமாகவே கர்வா சௌத் திருநாளில் இக்கொலை நடந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலிஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குடும்பத் தகராறில் மனைவியைக் கணவனே கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.