திக் திக் திக்… காலை நடைப்பயிற்சிக்குச் சென்ற தாய்-மகள் மீது… மின்னல் வேகத்தில் பாய்ந்த கார்… நெஞ்சை உறைய வைக்கும் CCTV காட்சி…!

By Swetha on ஐப்பசி 28, 2026

Spread the love

ஹரியானா மாநிலம் ரோத்தக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த கோர விபத்து காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற தாய் மற்றும் மகள் மீது பின்னோக்கி வந்த அதிவேகக் கார் ஒன்று கண் இமைக்கும் நேரத்தில் மோதித் தள்ளியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சித் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலை நேர அமைதியில் மக்கள் நடமாட்டம் இருந்த சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மின்னல் வேகத்தில் வந்து மோதிய விதம் அந்தப் பகுதி மக்களை உலுக்கியுள்ளது. விபத்து நடந்த விதம் குறித்த காட்சிகள் காண்பாரைப் பதறடிக்கும் வகையில் அமைந்துள்ளன.

   

பெருகிவரும் அதிவேக வாகன ஓட்டங்களாலும், சாலை விதிகளைப் பின்பற்றாத அலட்சியத்தினாலும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். காலை வேளையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் காவல்துறையினர் உரிய ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.