உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில், அதிவேகமாக வந்த அரசுச் சாலைப் போக்குவரத்துப் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் சென்றது. இந்தத் திடீர் அசம்பாவிதத்தின் போது, பாதையில் நின்றிருந்த பல வாகனங்கள் மற்றும் நடந்து சென்று கொண்டிருந்த பாதசாரிகள் மீது பேருந்து அடுத்தடுத்து மோதி கடுமையான விபத்தை ஏற்படுத்தியது.
இந்தக் கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் மற்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/ArunAzadchahal/status/2115260174755922215/video/1
விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரைச் சம்பவ இடத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். விபத்து நடந்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
