“ஸ்பாட் ஜஸ்டிஸ்”… நள்ளிரவில் வந்த ஒரு போன் கால்… இரண்டாவது என்கவுன்ட்டர்… சிறுமியை சீரழித்த காம மிருகத்திற்கு உடனடி தண்டனை…!!

By Gayathri on ஐப்பசி 28, 2026

Spread the love

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் கைகாடா பகுதியில், இசை நிகழ்ச்சி ஒன்றைக் காணச் சென்ற 17 வயது சிறுமி நள்ளிரவில் மர்மமான முறையில் மாயமானார். மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், விசாரணையில் அவரது உறவினரான பிரகலாத் தாஸ் என்பவர் சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து கைது செய்யப்பட்ட பிரகலாத் தாஸை, குற்றச் சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விசாரிப்பதற்காகப் போலீசார் சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர் திடீரென காவல்துறையினரைத் தாக்கிவிட்டுத் தப்பியோட முயன்றதால், போலீசார் அவரைத் தற்காப்புக்காக என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

   

மேற்கு வங்காளத்தில் இதுபோன்ற என்கவுன்ட்டர் சம்பவம் நிகழ்வது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக கடந்த ஜூலை மாதம் பரூய்பூர் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிரவாஸ் மொண்டல் என்பவர் இதேபோன்று தப்ப முயன்றபோது சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அம்மாநில அமைச்சர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.