“ரயிலின் கழிப்பறைக்குள் 6 மணி நேரம்…” கனவு கண்டு கொண்டிருந்தாரா…? கழுத்தில் காங்கிரஸ் துண்டுடன் வந்த நபர்… கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்…!!

By Devi Ramu on ஐப்பசி 28, 2026

Spread the love

‘அபு ரோடில்’ இருந்து ‘அஜ்மீர்’ நோக்கிச் சென்ற ரயிலில், கழிப்பறைக்குள் நுழைந்த பயணி ஒருவர் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளேயே பூட்டிக்கிடந்த சம்பவம் சோஷியல் மீடியாவில் பெரும் சிரிப்பலையையும் காரசாரமான அரசியல் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.

ரயிலின் கழிப்பறைக்குச் சென்ற நபர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த சக பயணிகள், ரயில்வே ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பெரும் போராட்டத்திற்குப் பிறகு கழிப்பறை கதவு பலவந்தமாக உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

   

கழிப்பறையில் அடைபட்டுக்கிடந்த நபர் கழுத்தில் காங்கிரஸ் கட்சியின் துண்டை அணிந்திருந்ததாகக் கூறி, “6 மணி நேரமாக உள்ளே உட்கார்ந்து ராகுல் காந்தி பிரதமர் ஆவது போலக் கனவு கண்டுகொண்டிருந்தாரா?” என்றும், “இந்தச் சம்பவத்தைப் பார்த்தால் ராகுல் காந்தியே அதிர்ச்சியாகிவிடுவார்” என்றும் எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்துக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த விநோத சம்பவம் குறித்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.