திமுக vs தவெக…! ரூ.41-க்கு மின்சாரமா?… ஆடிப்போன தமிழ்நாடு… உதயநிதிக்கு அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த ‘நச்’ பதிலடி…!!

By Gayathri on ஐப்பசி 28, 2026

Spread the love

தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 வரை அதிக விலை கொடுத்து அரசு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் நிதிச்சுமை மின்கட்டண உயர்வு வடிவில் மக்கள் தலையில்தான் விடியும் என்றும், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை அரசு கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் விமர்சித்திருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாக பரவும் செய்திகள் உண்மையில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். கோரப்பட்ட டெண்டர்களில் நிறுவனங்கள் ரூ.37 முதல் ரூ.41 வரை மிக அதிகமான விலையைக் குறிப்பிட்டிருந்ததால், அந்த விலையில் மின்சாரம் வாங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

   

மேலும், மாநிலத்தின் அடுத்த 3 மாதங்களுக்கான மின்தேவைக்கு போதுமான அளவு மின்சாரம் கையிருப்பில் உள்ளதாகவும், வரவிருக்கும் கோடைக்கால முன்னெச்சரிக்கையாகவே இந்த டெண்டர் பரிசீலிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கினார். அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட அந்த டெண்டரை உடனடியாக ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும், வருங்காலத்தில் கூடுதல் விலைக்கு எரிவாயு கொள்முதல் செய்வதைத் தவிர்த்து 20 ஆண்டுகளுக்கான நடுத்தர மற்றும் நீண்ட கால டெண்டர்கள் வெளிப்படையாகக் கொண்டுவரப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.