இதெல்லாம் AI வீடியோங்க!.. டிகிரி வாங்க ரூ.1000 போதுமா?… கையில் போன்… டேபிளில் புத்தகம்… தேர்வு ஹாலில் இருந்து வெளியான பகீர் வீடியோ வைரல்…!!

By Gayathri on ஐப்பசி 24, 2026

Spread the love

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார்கள் எழுந்துள்ளன. பணம் அளித்த மாணவர்கள் புத்தகங்கள் மற்றும் செல்போன்களைப் பயன்படுத்தி விடையளிக்க அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்கள் தனியாக இரண்டாவது தளத்தில் அமர வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், பல்கலைக்கழகத் தேர்வு கண்காணிப்பு முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

அதேசமயம், இந்தக் குற்றச்சாட்டுகளை மையத்தின் பிராந்திய இயக்குநர் பி.எம். சுவாமி திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மையத்திற்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளும் நடைபெறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தற்போது இப்பிரச்சினை பல்கலைக்கழக உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றுள்ள நிலையில், உண்மைத்தன்மையை அறிய நிர்வாகம் மேற்கொள்ளவிருக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.