ஐயோ… கடல் ஆக்ரோஷமாக எழுந்து வருதே… தைவானை உலுக்கிய சாம்பி புயலின்… பிரம்மாண்ட பேரழிவு அலைகள்… குலை நடுங்கவைக்கும் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 24, 2026

Spread the love

சாம்பி சூறாவளி தைவானை அச்சுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் வடகிழக்குக் கடலோரப் பகுதியில் பேரழிவு தரும் வகையில் பிரம்மாண்ட அலைகள் கரையை மோதித் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பார்வையாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. மணிக்கு சுமார் 191 கி.மீ வேகத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய இந்தச் புயலால் கடலில் சுமார் 20 அடிக்கும் உயரமான அலைகள் எழும்பி கடற்கரையை சீற்றத்துடன் தாக்கின.

இந்தக் கொடூரச் சூறாவளியின் தாக்குதலால் தைவானில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் 163-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புயல் பாதிப்பு அதிகம் உள்ள ஆபத்தான கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். கனமழை மற்றும் வீசிய புயல் காற்று காரணமாக அப்பகுதியில் பொதுவாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளதுடன், பல விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

   

சாம்பி சூறாவளியின் தீவிரத்தன்மை சற்றே குறைந்திருந்தாலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணத்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகளும் வானிலை ஆய்வு மையமும் எச்சரித்துள்ளனர். மக்கள் தேவையின்றி வெளியே பயணிப்பதைத் தவிர்க்குமாறும், மீட்புக் குழுவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுமாறும் தைவான் அரசு அறிவுறுத்தியுள்ளது.