தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், நேர விரயத்தைக் குறைக்கவும் சென்னை ஆர்.ஏ.புரம் பகுதியில் உள்ள அரசு இல்லத்திற்கு மாற திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு தினசரி வந்து செல்வதால் அதிக நேரம் ஆவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக ஆர்.ஏ.புரம் டி.ஜி.எஸ். தினகரன் சாலையில் உள்ள பொதிகை வளாக அரசு இல்லத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வீட்டின் புனரமைப்புப் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு, அதனைப் பார்வையிட்டு அங்கு மாறுவது குறித்து முதல்வர் விஜய் இறுதி முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
