“மனைவியின் தலையை துண்டித்து சூலத்தில் வைத்து பூஜை…” மகா அஷ்டமி நாளில் அரங்கேறிய கொடூரம்…. கணவரின் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

மேற்கு வங்கம் பங்காளு மாவட்டம் சோனமுகி பகுதிக்குட்பட்ட லால் பாபா மனச்சார் கிராமத்தில், மகா அஷ்டமி நாளான கடந்த அக்டோபர் 19 அன்று மங்கள் சௌதரி என்ற நபர் தனது மனைவி ரம்பா சௌதரி (39) என்பவரைக் கொன்று தலையைத் துண்டித்து, வீட்டின் முன்பு உள்ள காளி சன்னதி சூலத்தில் வைத்துப் பூஜை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகா அஷ்டமி நன்னாளில் தாந்த்ரீக சடங்கிற்காக இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவர், இதனைக் தடுக்க வந்த தனது 60 வயது தந்தை ராஜேந்திர சௌதரியையும் (Rajendra Chowdhury) வீட்டிற்குள் வைத்து வெட்டிக் கொன்றுள்ளார். தனது தம்பியையும் கொல்ல முயன்றபோது அவர் தப்பியோடி உயிர் தப்பினார். ரத்தக் கறையுடன் கத்தியை ஏந்திக்கொண்டு கிராமத்திற்குள் நபர் வலம் வந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உறைந்தனர். தகவலறிந்து விரைந்த காவல்துறையினர் கொடூரச் செயலில் ஈடுபட்ட மங்கள் சௌதரியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.