படிக்கிற பையனா நீ…? ஆசிரியரின் முகத்தில் குத்திய மாணவன்… ஆடை முழுவதும் நனைந்த ரத்தம்… கிளாஸ் ரூமில் பரபரப்பு… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 22, 2026

Spread the love

வியட்நாம் தலைநகர் ஹனோயில் உள்ள மாக் தின் சி உயர்நிலைப் பள்ளியில், வகுப்பறையில் தீவிரமாகப் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை மீது 17 வயது மாணவன் ஒருவன் திடீரெனக் கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் குத்துத் தாக்குதலால் நிலைதடுமாறி விழுந்த ஆசிரியையின் முகம் முழுவதும் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் அணிந்திருந்த மஞ்சள் நிற ஆடை முழுவதும் ரத்தத்தால் நனைந்த படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை உலுக்கியுள்ளன. சம்பவத்திற்குப் பின் துறை சார்ந்த அமைச்சு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், குற்றத்தைச் செய்த மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவனின் இந்த வன்முறைச் செயலைக் கண்டித்து அவனைப் பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.