தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு வீடியோ கால் மூலம் ஆயுத பூஜை விழாவில் ஆசி வழங்கிய விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையையும் கடுமையான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தைப் பாதுகாத்து நடைமுறைப்படுத்த வேண்டிய உள்துறைப் பொறுப்பில் இருக்கும் ஒரு அமைச்சர், நீதிமன்றங்களால் தேடப்படும் நபரிடம் வெளிப்படையாக ஆசி பெற்றது தார்மீக ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
