அரசியலில் உச்சக்கட்ட மோதல்…. மா.செ.,வை ஓரங்கட்டுகிறார்களா அமைச்சரும் எம்.எல்.ஏ.வும்?…. தவெக இரண்டாக உடைந்தது….!

By Nanthini on ஐப்பசி 22, 2026

Spread the love

விருதுநகர் வடமேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ள மாரிசெல்வத்திற்கும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும் இடையே நிலவி வரும் அதிகார மோதல் மற்றும் உட்கட்சி பூசல் அக்கட்சியினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் வடமேற்கு மா.செ. பொறுப்பில் மாரிசெல்வம் செயல்பட்டு வரும் நிலையில், சிவகாசி பகுதிக்கு அமைச்சர் கீர்த்தனா பொறுப்பேற்றுக் கொண்டதும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தனிப்பட்ட முறையில் விளம்பர தேடுவதிலும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.

மேலும், கடந்த காலங்களில் விஜய் மக்கள் இயக்கம் வழியாகப் பணியாற்றிய மாரிசெல்வத்திற்கு அமைச்சர் கீர்த்தனாவும் எம்.எல்.ஏ. கார்த்திக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் அளிப்பதில்லை என்ற அதிருப்தி மாரிசெல்வத்தின் ஆதரவாளர்கள் மத்தியில் வெளிப்படையாகவே வெடித்துள்ளதால், மாவட்ட அரசியல் களத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.