உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் மிஸ்ரிக் பகுதியில், 17 வருடத் திருமண வாழ்க்கை மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான நபர் ஒருவர், தன் மனைவிக்கு வேறு ஒருவருடன் வாழ்வதில் விருப்பம் இருந்ததை உணர்ந்து, அவருக்கும் அவரது காதலனுக்கும் தானே முன்னின்று திருமணம் செய்து வழியனுப்பி வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபின் பரத்வாஜ் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்பத்தை விட்டுச் சென்ற மனைவி வேறு ஒருவருடன் வாழ விரும்புவதாகத் தெரிவித்ததைத் தொடர்ந்து, இருவரின் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு கணவரே தன் மனைவியை அவரது காதலனுடன் சேர்த்து வைத்த விசித்திரமான நிகழ்வு ஊடகங்களிலும் எக்ஸ் தளத்திலும் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விதமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
