ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிஷாந்த் சபூ பகிர்ந்துள்ள ஒரு நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆடம்பர கார் ஷோரூம் ஒன்றின் வெளியே நின்றுகொண்டு, பள்ளிக்கூ சீருடையில் இருந்த இரண்டு சிறுவர்கள் லம்போர்கினி காரை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துள்ளனர். இதைக் கவனித்த ஷோரூம் உரிமையாளர், அந்தச் சிறுவர்களை அன்போடு உள்ளே அழைத்து அவர்களின் மீது தன் கனிவை வெளிப்படுத்தியுள்ளார்.
குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்த விரும்பிய அவர், ஷோரூம் ஊழியர்களைக் கொண்டு அந்தச் சூப்பர் கார்களுக்கு அருகில் நின்று சிறுவர்கள் மறக்க முடியாத புகைப்படங்களை எடுத்துக்கொள்ள அனுமதித்துள்ளார். இந்தச் சிறிய ஆனால் மிக அழகான செயல் இணையவாதிகளின் இதயங்களை வென்றுள்ளதுடன், சமூகத்தில் பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
https://twitter.com/CNNnews18/status/2112136029486649622/video/1
வசதியானவர்கள் மட்டுமே அணுகக்கூடிய ஆடம்பர உலகிற்குள், சிறுவர்களின் எளிய ஆசையை மதித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த இந்தச் செயல் மனிதநேயம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. இந்த வீடியோ வெறும் வைரல் காட்சியாக மட்டும் இல்லாமல், சிறுவர்களின் கனவுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத மனிதரின் குணத்தை உலகுக்குக் காட்டியுள்ளது.
