சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தலைமைச் செயல் அதிகாரியுமான காவ்யா மாறனுக்கும், முன்னணி இசையமைப்பாளர் அனிருத்துக்கும் இடையே காதல் நிலவுவதாக நீண்ட நாட்களாகத் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில், இவர்களது திருமண ஏற்பாடுகள் குறித்த விரிவான விவரங்கள் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.
வெளியாகியுள்ள தகவலின்படி, இவர்களின் திருமணம் ஐரோப்பிய நாடான கிரீஸில் நவம்பர் 11 அன்று இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் முக்கிய விருந்தினர்களுக்காகத் தனி விமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், திருமணத்தை முன்னிட்டு அனிருத் தனது இசைப் பணிகளில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21 அன்று சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகச் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி மாறன் ஆகியோர் ஐதராபாத் சென்று, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து திருமண வரவேற்பு அழைப்பிதழை வழங்கியுள்ளனர். இருப்பினும், இந்தத் திருமணம் குறித்து அனிருத் அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
