அதிர்ச்சி… மருத்துவமனையில் நடுவழியில் நின்ற லிப்ட்… 7 பேர் பத்திரமாக மீட்பு… காஞ்சிபுரத்தில் நடந்த சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 18, 2026

Spread the love

காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், காலில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த ஒருவரைப் பார்ப்பதற்காக உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர். அவர்கள் மருத்துவமனையின் 2-வது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு லிப்ட் மூலம் கீழே இறங்கிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் லிப்டில் மொத்தம் 7 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, 7 பேருடன் இயங்கிக் கொண்டிருந்த லிப்ட் தரைத்தளத்தை அடையும் முன்பே நடுவழியிலேயே பாதியிலேயே நின்றது. இதனால் லிப்டுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டு அச்சமடைந்தனர்.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். லிப்டில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்பதற்கும், அப்பகுதியில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு தடுப்பதற்கும் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் போலீசார் தீவிரமாக மேற்கொண்டனர்.