650 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை… நடுவில் இருக்கும் பாறை… தீவிரமாக களமிறங்கிய மீட்பு குழுவினர்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 18, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் குழந்தை ஒன்று தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கிராம பஞ்சாயத்து புனியா நௌசார் பகுதியில் சிறுவன் ஒருவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

கிணற்றில் 600 அடி ஆழத்தில் ஒரு பாறை சிக்கியிருப்பதாலும், குழந்தை 650 அடி ஆழத்தில் இருப்பதாலும், முதலில் அந்தப் பாறையை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. திறந்தவெளியில் விடப்படும் ஆழ்துளை கிணர்களால் தொடரும் இது போன்ற விபத்துகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களையும் கவலையையும் தெரிவித்து வருகின்றனர்.