ரசிகர்களின் உதவியால் கிடைத்த செல்லப்பிராணி … 4 நாட்களாக தேடி அலைந்த இந்திய நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் குடும்பத்தினர்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் குடும்பத்தினரால் 4 நாட்களாகத் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த ‘பிரூடோ’ என்ற 5 வயது லேப்ரடார் நாய் பத்திரமாக மீட்கப்பட்டு குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ரிங்கு சிங்கின் இல்லத்திலிருந்து கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி காலை நடைப்பயிற்சிக்காகச் சென்ற பிரூடோ வீடு திரும்பவில்லை.

இதனைத் தொடர்ந்து, ரிங்கு சிங்கின் சகோதரி நேஹா சிங் சமூக வலைதளங்களில் பிரூடோவின் படங்களை வெளியிட்டு உதவி கோரினார். நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களின் தொடர் பகிர்வு மற்றும் தகவல்கள் காரணமாக 4 நாட்களுக்குப் பிறகு பிரூடோ கண்டுபிடிக்கப்பட்டது. வீடு திரும்பிய பிரூடோ குடும்பத்தினரைக் கண்டதும் ஓடிவந்து கட்டியணைத்துக் கொண்ட வீடியோவைப் பகிர்ந்துள்ள நேஹா சிங், உதவி செய்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.