“இது தேவையா…?” தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்…. ராட்சத பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 17, 2026

Spread the love

மெக்சிகோ நாட்டின் மோர்லோஸ் மாகாணத்தில் உள்ள குவேர்னவாகா பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஆபத்தான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாந்தா மரியா அஹுவாகாடிட்லான் பகுதியில் உள்ள தேசிய சாலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகப் பெரிய பள்ளம் ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதனால் விபத்துகளைத் தவிர்க்க அப்பகுதி மக்கள் எச்சரிக்கை நாடாக்களைக் கட்டி அப்பகுதியைத் தடை செய்திருந்தனர். ஆனால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அந்த எச்சரிக்கைப் பட்டையைக் கிழித்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாகப் பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளார். பாதுகாப்பைக் கவனிக்காமல் விதிமீறலில் ஈடுபட்ட ஓட்டுநரைக் கண்டித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.