காலை 4:36 மணி…. படுக்கையில் இருந்தவர்கள் அதிர்ச்சி… ரிக்டர் அளவில் 4.1-ல் உலுக்கிய சிம்லா நிலநடுக்கம்….. பீதியில் உறைந்த மக்கள்….!

By Nanthini on ஐப்பசி 17, 2026

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இன்று அதிகாலை 4.36 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி, ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், சிம்லாவிலிருந்து கிழக்கு-வடகிழக்கு திசையில் 40 கி.மீ தொலைவில் உருவாகியுள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த திடீர் நடுக்கத்தால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்; இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.