பைக் டாக்ஸி பயணம் ஒன்றில் பெண் பயணியும் ஓட்டுநரும் இடையே கட்டணம் தொடர்பாக நடைபெற்ற ஒரு சின்னச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. பயணி ஒருவர் தவறான டிராப் லொகேஷனைப் பதிவிட்டுவிட்டு, பின்னர் ஓட்டுநரிடம் “இடத்தை மாற்றிவிட்டேன், மேலும் 2 கி.மீ. முன்னால் இறக்கிவிடுங்கள்” என்று கூறியுள்ளார்.
அதற்கு ஓட்டுநர், “ரூ.60 கட்டணம் வரும் இந்த ரைடுக்கு ரூ.80 கொடுங்கள், மேலும் அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறி சம்மதிக்க வைத்துள்ளார். ஆனால், இலக்கை அடைந்ததும் ஓட்டுநர் கேட்ட கூடுதல் தொகையைக் கொடுக்க மறுத்த அந்தப் பெண், ஆரம்பத்தில் பேசிய ரூ.60-ஐ மட்டுமே கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார். ஓட்டுநரின் உழைப்பு ஏமாற்றப்பட்டதாகக் கூறி நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
