அடுத்த டார்கெட் நீங்களா?… போலி போதைப்பொருள் பார்சல்… மிரட்டிய கும்பல்… மாடியிலிருந்து குதித்த இளம் ஐடி ஊழியர்… போலீஸ் தீவிர வேட்டை…!!

By Gayathri on ஐப்பசி 16, 2026

Spread the love

புனேவில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் அண்மையில் பணியில் சேர்ந்த இளம் பொறியாளர் ஷிகார் சக்சேனா, குடியிருப்பு வளாகத்திலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். இவரது பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், காவல் துறையில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாகவும் கூறி இணையவழிக் கும்பல் ஒன்று அச்சுறுத்தியுள்ளது. போலியான காவல் அதிகாரி என்ற போர்வையில் தொடர்ந்து மிரட்டி அவரிடமிருந்து வங்கிக் கணக்குகள் மூலம் பணம் பறிக்கப்பட்ட அதிர்ச்சிகரமான தகவல்கள் அவரது மடிக்கணினி சோதனையில் தெரியவந்துள்ளன.

இளைஞரின் தந்தைக்கு வந்த மிரட்டல் அழைப்புகள் மற்றும் போலி கூரியர் நிறுவன விசாரிப்புகள் குடும்பத்தினரின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதை அடுத்து, காவல் துறையில் முறையான புகார் அளிக்கப்பட்டது. தற்கொலைக்குத் தூண்டுதல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ள புனே காவல் துறையினர், சந்தேக நபர்களின் அலைபேசி எண்கள் மற்றும் பணப்பரிவர்த்தனைகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம், நாடு முழுவதும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வரும் பார்சல் மோசடி வலைப்பின்னலை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.