திக் திக் திக்… கள்ளக்காதலியை அடித்துக் கொன்று… குப்பைக் குழிக்குள் புதைத்த கொடூரன்… குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

தருமபுரி மாவட்டம் கடத்தூர் 4-வது வார்டில் வாடகை வீட்டில் வசித்து வந்த பாப்பாத்தி (46) என்பவரைக் கொன்று, வீட்டின் அருகில் உள்ள காலி இடத்தில் புதைத்த வெங்கடாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாப்பாத்தியும், மணியம்பாடியைச் சேர்ந்த வெங்கடாசலமும் குடும்பத்தினரைப் பிரிந்து சில மாதங்களாகக் கடத்தூரில் சேர்ந்து வசித்து வந்துள்ளனர். அடிக்கடி யாரிடடமோ செல்வதாகக் கூறி வந்த பாப்பாத்தி மீது வெங்கடாசலத்திற்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2-ஆம் தேதி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், வெங்கடாசலம் பாப்பாத்தியைக் கட்டையால் கடுமையாகத் தாக்கிவிட்டுச் சென்றுள்ளார். பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி இறந்த நிலையில், ஆறு நாட்களுக்குப் பிறகு திரும்பி வந்த வெங்கடாசலம் யாருக்கும் தெரியாமல் உடலைத் துணியால் மூட்டையாகக் கட்டி புதைத்துள்ளார். மேலும், உறவினர்கள் யாரும் தேட மாட்டார்கள் என்ற தைரியத்தில் சடலத்தின் மீது குப்பைகளைக் கொட்டி மறைத்துவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

   

துர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தலைமறைவாக இருந்த வெங்கடாசலத்தைக் கைது செய்து விசாரித்ததில், சந்தேகத்தின் பேரில் கட்டையால் அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.