ரூ.1,000 இன்னும் வரவில்லையா?…. மகளிர் உரிமைத்தொகை குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்…. இல்லத்தரசிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 15, 2026

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையின் 38-வது தவணைத் தொகை தற்போது தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த மாதம் ஆயிரம் ரூபாய் பெற்ற பல பயனாளிகளுக்கு தற்போதைய தவணைத் தொகை இன்னும் வரவு வைக்கப்படவில்லை என்ற கவலை சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தச் சூழலில் பயனாளிகள் யாரும் திட்டத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பதால், பொதுமக்கள் எவரும் அச்சப்படத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகை வரவு தாமதமாவதற்கான முக்கியக் காரணமாக வங்கியின் சர்வர் கோளாறுகள் அல்லது உங்களது வங்கிக் கணக்கில் கே.ஒய்.சி (KYC) ஆவணங்கள் புதுப்பிக்கப்படாமல் இருப்பது ஆகியவை இருக்கக்கூடும். எனவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு உடனடியாக உங்களது தொடர்புடைய வங்கிக் கிளை அல்லது அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கணக்கு விவரங்களைச் சரிபார்த்துத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.