உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹாத் பகுதியில் கட்டுப்பாடில்லாமல் திரிந்த காளை மாடு ஒன்று முதியவர் மீது நடத்திய வெறித்தனமான தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 80 வயது முதியவர் ஒருவர் காளையைத் தடியால் அடித்ததால் ஆத்திரமடைந்த அந்த விலங்கு, அவரை விடாமல் துரத்திச் சென்று பலமுறை முட்டித் தள்ளிக் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சோஷியல் மீடியாவில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காளை மாட்டின் தாக்குதலில் படுகாயமடைந்த முதியவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். கார்களின் மோதுதல்களையும் விலங்குகளின் தாக்குதல்களையும் காட்டும் இந்தத் திகில் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
