“உயிருக்கே ஆபத்தா?”… பீகாரில் நடக்கும் ஆச்சரியம்… ‘அம்மா அருளால்தான் சாத்தியம்… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

By Gayathri on ஐப்பசி 14, 2026

Spread the love

பீகாரில் நவராத்திரி விழாவையொட்டி துர்கா தேவியின் அருளைப் பெறுவதற்காகவும், மக்களின் நல்வாழ்விற்காகவும் பெண் பக்தர் ஒருவர் கடுமையான விரத முறையைக் கையாண்டுள்ளார். அவர் 2,516 கூர்மையான இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட பலகையின் மீது படுத்து தனது தீவிர பக்தியை வெளிப்படுத்தினார். உடலை வருத்தி மேற்கொள்ளப்படும் இந்த அசாத்திய தவம், திருவிழா நாட்களில் அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களை வியப்பிலும் பரவசத்திலும் ஆழ்த்தியது.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் உணவின்றி நீர் மட்டுமே அருந்தி விரதமிருக்கும் இப்பெண், இறையருளும் மன உறுதியும் மட்டுமே இத்தகைய கடினமான சவாலை எதிர்கொள்ளும் வலிமையைத் தருவதாகக் கூறுகிறார். காயங்களோ அசைவுகளோ இன்றி அமைதியுடன் ஆணிகள் நிறைந்த படுக்கையில் அவர் படுத்திருக்கும் காட்சி அப்பகுதி மக்களிடையே பெரும் ஆன்மீக ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரை தரிசித்து ஆசி பெற சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு வருகின்றனர்.