“தேங்காய் கடைக்கு இவ்ளோ சண்டையா…? நடுரோட்டில் கட்டிபுரண்டு சண்டை போட்ட இரு தரப்பினர்… போலீசார் கண்முன்னே வெறித்தனமாக தாக்குதல்…. பகீர் வீடியோ…!!!

By Devi Ramu on ஐப்பசி 14, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் மொராதபாத் பகுதியில் உள்ள சிஓ சிவில் லைன்ஸ் அலுவலகத்திற்கு மிக அருகில், தேங்காய் கடை அமைப்பது தொடர்பாக இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றிக் கைகலப்பாக மாறியுள்ளது. பொதுமக்களும் வாகனங்களும் சென்றுவரும் பிரதான சாலையில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாகத் தாக்கித் தடியடியில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாகக் காவல்துறையினர் விரைந்து வந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் இரு தரப்பினரும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் மோதிக் கொண்ட இந்தக் காட்சி சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் இரு தரப்பு மீதும் தகுந்த முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.