உத்தரப்பிரதேசம் மாநிலம் பஹ்ரைச் மாவட்டம் மதாரா காவல் எல்லைக்குட்பட்ட ஷங்கர்பூர் பகுதியில் உள்ள பைபர்ஹவா கால்வாயில், சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பஸ்தி மாவட்டம் ருதௌலி காவல் எல்லைக்குட்பட்ட காந்திரியா புசுர்க் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் கசௌந்தன் (30) என்பது தெரியவந்துள்ளது.
மும்பை போரி பகுதியில் கூலி வேலை செய்து வந்த அவர், தான் குஜராத் செல்வதாக வீட்டாரிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் பரவிய சடலத்தின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், நேற்று முன்தினம் சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர். ஆகாஷின் இறப்புக்கான உண்மையான காரணம் குறித்துக் காவல் துறையினர் அவரது மொபைல் கால் டிடைல்ஸ் மற்றும் பிற கோணங்களில் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
