ஐயோ…என்ன கொடுமை இது?… 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… கொடுத்த அதிநவீன இயந்திரம்… உறைந்துபோன காவல்துறை… ஜெர்மனியில் அரங்கேறிய கொடூரம்…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

ஜெர்மனியின் கொலோன் நகரில் உள்ள ஒரு துரித உணவு உணவகத்திற்கு வெளியே, 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தபோது ரோபோ ஒன்று அவரைத் தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மற்றும் தங்கம் நிறத்தில் சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள அந்த ரோபோ, திடீரென பின்தொடர்ந்து வந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தை ரோபோவின் உரிமையாளரான 16 வயது சிறுவனும், அவனுடன் இருந்த 19 வயது இளைஞரும் சமூக வலைதளங்களில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த ரோபோவை வேண்டுமென்றே தொலைவிலிருந்து இயக்கி இந்தச் செயலில் ஈடுபட்டனரா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

   

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரோபோவையும் சந்தேகத்திற்கிடமான நபர்களின் இரண்டு கைப்பேசிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காரின் பின்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த அந்த ரோபோவைக் கைப்பற்றிய அதிகாரிகள், இந்தச் சம்பவம் தொடர்பான குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.