“நீ எனக்கு இல்லனா யாருக்குமில்ல”… மாயமான இளம்பெண்?… அடுத்த மாசம் கல்யாணம்… காதலன் போட்ட ஸ்கெட்ச்… காதலியை கொன்ற கொடூரன்…!!

By Gayathri on ஐப்பசி 13, 2026

Spread the love

தனக்கு நிச்சயிக்கப்பட்ட வேறு ஒருவருடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில், காதலனால் இளம்பெண் ஒருவர் மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலித்து வந்த பெண் தன்னைத் தவிர்த்து வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை அந்த இளைஞனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் கடும் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த அவன், அப்பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திட்டமிட்டு அவரை மலையிலிருந்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்துள்ளான்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளியைக் கைது செய்தனர். தொடர்ந்து உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். திருமணப் பந்தம் கைநழுவிப் போன ஆத்திரத்தில் காதலியையே உயிரோடு மலையிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.