திக் திக் நிமிடங்கள்…!! மின்னல் வேகம்…! பறந்து வந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சுனாப்வத் பகுதியில் உள்ள பக்வான்சர் பெட்ரோல் பங்க் அருகே அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ஓட்டுநரின் கடுமையான கவனக்குறைவு மற்றும் அதிவேகம் காரணமாக அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து திடீரென 15 அடி உயரத்திற்கு மேல் காற்றில் பறந்து, தலைகீழாகச் சாலையில் கவிழ்ந்துள்ளது.

சாலையில் பயணம் செய்யும் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் நடைபெறும் இத்தகைய அதிவேக ஓட்டுதல்கள் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “வேகம் மனிதனை சிலிர்க்க வைக்கலாம், ஆனால் அதுவே உயிரையும் பறித்துவிடும்” என்பதை உணர்த்திடும் வகையில் அமைந்துள்ள இந்த விபத்து தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.