ஐயோ… கண்காணிப்பு கேமராவை மிஞ்சிய கைவரிசை… செல்போன் கடையில் கேஸ் கட்டரைக் கொண்டு… ரூ 15 லட்சம் மதிப்புள்ள போன்கள் திருட்டு… கர்நாடகாவின் நடந்த சம்பவம்…!

By Swetha on ஐப்பசி 13, 2026

Spread the love

கர்நாடகாவின் ஒசக்கோட்டே பகுதியில் உள்ள கே.இ.பி. வட்டம் அருகில் உள்ள துர்கா மொபைல் கடையில் கடந்த அக்டோபர் 10-ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் சுமார் 15 லட்சத்திற்கும் அதிக மதிப்புள்ள 25 செல்போன்கள் திருடப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடையின் ஷட்டரை உடைக்க குற்றவாளி கேஸ் கட்டர் இயந்திரத்தைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஷட்டரை லாவகமாக அறுத்து உள்ளே நுழைந்த அந்த மர்ம நபர், கடையில் இருந்த விலையுயர்ந்த செல்போன்களைக் கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

   

https://twitter.com/HateDetectors/status/2109961092525113601/video/1

   

இந்தத் துணிகரத் திருட்டுச் சம்பவம் ஒசக்கோட்டே வணிகப் பகுதி வியாபாரிகளிடையே பாதுகாப்புக் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.