“அம்மா சூடு வச்சிட்டாங்க மாமா…” காதலனுடன் சேர்ந்து பச்சிளம் குழந்தைகளை சித்திரவதை செய்த தாய்… தட்டி கேட்டவருக்கு கொலை மிரட்டல்…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி பகுதியைச் சேர்ந்தவர் சுகன்யா. இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாகக் கணவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது நாகர்கோவிலை அடுத்த மேலகிருஷ்ணன்புதூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாகத் தனது குழந்தைகளுடன் ரஞ்சித்குமாருடன் சுகன்யா வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகள் சில நாட்களுக்கு முன்பு தம்பி வீட்டில் விடப்பட்டிருந்தபோது, குழந்தைகளின் கை, கால் மற்றும் வயிறு உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக் காயங்களும் சூடு வைத்த தழும்புகளும் இருப்பதைக் கண்டு தம்பி அதிர்ச்சியடைந்துள்ளார். குழந்தைகளிடம் விசாரித்தபோது தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து தங்களைத் சித்ரவதை செய்த விவகாரம் தெரியவந்துள்ளது. இதைக் தட்டிக் கேட்ட தம்பிக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தாய் சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.