இங்கிலாந்தில் மூன்று குழந்தைகளின் தாயான கரோலான் பாராக்லோ என்பவரைக் கடந்த பிப்ரவரி மாதம் அவரது கணவரான டேவிட் பாராக்லோ(46) சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலை செய்தபின் மனைவியின் உடலைக் கயிற்றால் கட்டி, வீட்டின் ஒரு அறையில் இருந்த ப்ரீசர் பெட்டிக்குள் மறைத்து வைத்துள்ளார். அதுமட்டுமின்றி, மனைவி மருத்துவமனையில் இருப்பதாகக் கூறி அவரது கைப்பேசியிலிருந்தே உறவினர்களுக்குத் தொடர்ந்து குறுஞ்செய்திகளையும் அனுப்பியுள்ளார்.
ப்ரீசர் இருந்த அறைக்குள் குழந்தைகள் யாரும் செல்லாதவாறு தடுத்துவிட்டு, அதே வீட்டில்தான் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார். மேலும், மனைவியைக் கொன்ற சில நாட்களிலேயே ‘டிண்டர்’ டேட்டிங் செயலியைப் பயன்படுத்தியதுடன், மதுபான விடுதிகளுக்குச் சென்று ஜாலியாகவும் இருந்துள்ளார். இதற்கிடையில் போலீசில் தானாகவே சென்று சரணடைந்த அவர், தற்காப்புக்காகவே கொன்றதாகக் நாடகமாடியுள்ளார். நீதிமன்ற விசாரணையில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, டேவிட் பாராக்லோவுக்குக் குறைந்தபட்சம் 22 ஆண்டுகள் மற்றும் 1 மாதம் சிறைத்தண்டனையுடன் கூடிய ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
