பகீர்…! மாணவியை அடித்து, முடியை பிடித்து தாக்கிய ஆசிரியர்…. கொந்தளித்த நெட்டிசன்கள்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் லோகாவத் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவி மீது தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் அல்லது பள்ளி வளாகத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், ஆசிரியர் சிறுமியைத் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

படிப்பு தொடர்பான விஷயத்திற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று இணையத்தில் தகவல்கள் பரவி வரும் நிலையில், கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீது நடத்தப்படும் இத்தகைய வன்முறைச் செயல்களுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.