“23 விநாடிகளில் 13 செருப்படி, 4 உதைகள்…” நோயாளி உறவினரிடம் அத்துமீறிய ஊழியர்…. வெளுத்து வாங்கிய குடும்பத்தினர்…. வைரலாகும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

உத்தரப்பிரதேசம் மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள தன்னாட்சி மாநில மருத்துவக் கல்லூரியில், நோயாளிகளுடன் வந்த உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர் ஒருவர் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் மருத்துவமனை வளாகத்திலேயே அந்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கினர்.

வெறும் 23 விநாடிகளுக்குள் அந்த ஊழியரை 13 செருப்புகளாலும், 4 உதைகளாலும் பொதுமக்கள் வெளுத்து வாங்கிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த லலித்பூர் காவல்துறையினர் மற்றும் கான்பூர் ஏ.டி.ஜி அலுவலகம், உடனடியாக இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.