விமான நிலையத்தில் பயங்கரம்…! ஏவுகணை தாக்குதலில் இந்தியர் உட்பட 13 பேர் கொடூர மரணம்…! சவூதி அரேபியாவில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2026

Spread the love

சவூதி அரேபியாவின் தலை நகரான ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலைய முனையத்தில் ஏமன் நாட்டின் ஈரான் ஆதரவு பெற்ற ‘ஹூதி’ கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 380-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்த இந்தியர் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர் என்பதும், அவர் தனது குடும்பத்தினருடன் மெக்காவிற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டபோது இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

தாக்குதலின் போது விமான நிலைய முனையத்தின் கூரை இடிந்து விழுந்ததும், ஆரஞ்சு நிறத்தில் பயங்கர வெளிச்சத்துடன் வெடிப்பு ஏற்பட்டு பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் உயிருக்குப் பயந்து நாலாபுறமும் அலறியடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் சவூதி அரசுத் தொலைக்காட்சியில் வெளியாகி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள், தம்மாம் விமான நிலையம் மற்றும் சவூதி அரம்கோ எண்ணெய் நிறுவனத்தையும் இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ரியாத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், விமானப் போக்குவரத்துப் பயண எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.