பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில்… மாடியில் தூங்கிய 7 வயது சிறுமி மாயம்…. அடுத்து நடந்த அதிர்ச்சி…. நள்ளிரவில் திடுக்கிடும் சம்பவம்….!

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு என்பவரின் 7 வயது மகள் ஹேமாவதி, கடந்த அக்டோபர் 10 அன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அன்று இரவு குடும்பத்தினருடன் வீட்டின் மாடியில் உறங்கச் சென்ற சிறுமி, நள்ளிரவில் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை சுமார் 3 மணியளவில் விழித்தெழுந்த சிறுமியின் தாயார் பவானி, அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகளைக் காணாமல் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குடும்பத்தினருடன் வீட்டின் சுற்றுப்புறங்களிலும், உறவினர்களின் வீடுகளிலும் தீவிரமாகத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

   

புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல் துறையினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்து பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை விரைவாகக் கண்டறியும் நோக்கில் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதி முழுவதும் அதிரடித் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

   

பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களிலேயே சிறுமி தூக்கத்திலேயே காணாமல் போன இச்சம்பவம் அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காவல்துறையினர் நடத்திவரும் தீவிர விசாரணையின் மூலம் சிறுமி பத்திரமாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்புடன் கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.