இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மும்பை ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போராட்டத்தின் போது, பாலிவுட் நடிகர் அமீர் கானின் உறவினரும் நடிகையுமான ஸைன் மேரி (Zayn Marie), நடிகர் இம்ரான் கான் மற்றும் நடிகை லேகா வாஷிங்டன் ஆகியோர் காவல்துறையினரால் தற்காலிகமாகக் கைது செய்யப்பட்டு, சில மணி நேர விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
விடுதலையான பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட ஸைன் மேரி, காவல்துறையினரின் கெடுபிடியால் தனது கைகள், விரல்கள் மற்றும் கால்களில் ஏற்பட்டுள்ள காயத் தடங்களைக் காட்டியுள்ளார். மேலும், “எங்களுக்கு பயமே இல்லாத அளவுக்கு எங்களை அந்த அளவிற்கு பயமுறுத்த முயராதீர்கள்” என்று அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, ஜனநாயக முறையில் குரல் எழுப்பும் உரிமை மீதான அடக்குமுறை குறித்துப் பலரின் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
https://www.instagram.com/reel/DeWIRLUKyop/?utm_source=ig_embed&ig_rid=AW7M4Om6nN80w8CHzx_gJ8K
முன்னதாக, காவல் வாகனத்திற்குள் இம்ரான் கான் மற்றும் லேகா வாஷிங்டனுடன் சிரித்த முகமாக ‘வெற்றி’ சிக்னலைக் காட்டியவாறு அமர்ந்திருந்த புகைப்படங்களை ஸைன் பகிர்ந்திருந்தார். தேர்தல் ஆணையரின் ராஜினாமாவை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தப் போராட்டங்களுக்கு, பாலிவுட் பிரபலங்களான ஹுமா குரேஷி மற்றும் விஜய் வர்மா உள்ளிட்டோரும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
