“எடையைக் குறைக்க டயட்டா…? நோவே…! பக்கவிளைவே இல்லாமல் எடையை குறைக்கும் 5 அற்புத பழங்கள்… டாக்டர் சொல்லும் சீக்ரெட்…!!

By Devi Ramu on ஐப்பசி 12, 2026

Spread the love

உடற்பயிற்சி செய்தும் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றியும் உடல் எடை குறையாமல் அவதிப்படுபவர்களுக்கு ஒரு எளிய இயற்கை தீர்வைப் பரிந்துரைக்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஷிகா சர்மா. அந்த வகையில், ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன. இதில் உள்ள அதிகப்படியான நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருப்பதுடன், நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையற்ற கொழுப்பை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கிறது.

அதேபோல, சிட்ரஸ் வகையைச் சேர்ந்த ஆரஞ்சு பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்துத் தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும், மற்ற பழங்களை விடக் குறைந்த அளவே சர்க்கரை கொண்ட பச்சைக் கொய்யாப்பழத்தை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால், மாலை வேளையில் தேவையற்ற நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடும் எண்ணம் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்.

   

அதேபோல், தினமும் காலையில் வேறு எந்தச் சிற்றுண்டியும் இல்லாமல் ஒரே ஒரு வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால், அதிலுள்ள பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கி எடையைக் குறைக்க உறுதுணையாக இருக்கும். இறுதியாக, செரிமான ஆற்றலை அதிகரிக்கும் பப்பாளிப் பழத்தை மதிய உணவிற்குப் பிறகு தினமும் சாப்பிட்டு வந்தால், அது செரிமானத்தை விரைவுபடுத்துவதோடு உடலின் தேவையற்ற கழிவுகளையும் கொழுப்பையும் வெளியேற்றுகிறது.

   

இந்த 5 அற்புதப் பழங்களையும் சரியான நேரத்தில் நமது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், எந்தவிதக் கடினமான கட்டுப்பாடுகளும் இன்றி மிகவும் ஆரோக்கியமான முறையில் எடையைக் குறைத்து உடலை சுறுசுறுப்பாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.